states

img

தில்லியைப் போன்று காஷ்மீர் இனியும் தொடர முடியாது.... மாநில அந்தஸ்தை உடனடியாக வழங்க வேண்டும்...

ஸ்ரீநகர்:
துணை நிலை ஆளுநரால் அனைத்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்படும் தில்லி போன்று ஜம்மு - காஷ்மீர் இருக்கக் கூடாது என்று அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற காங்கிரஸ் அலுவலகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு குலாம் நபி ஆசாத், இதுதொடர்பாக மேலும் பேசி யிருப்பதாவது:ஜம்மு - காஷ்மீர் எல்லை மாநிலமாகும். இங்கே துணை நிலை ஆளுநர் ஆட்சி நடத்தக்கூடாது. நிலங்களை பாது காக்கும் உரிமைகளை அரசியலமைப்பு பிரிவு 370 வழங்கவில்லை. அது புதிய சட்டமும் இல்லை. இந்தச் சட்டம் 1927-ஆம் ஆண்டு மகாராஜா ஹரி சிங்கால் பிறப்பிக்கப்பட்டது. 

இதேபோன்று வடகிழக்கு மாநிலங்களிலும் நில உரிமைகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன. அண்மையில் இமாசல பிரதேசம் கூட தங்களின் சட்டமன்றத்தில் இதுதொடர்பாக சட்டம் இயற்றியது. அவ்வாறிருக்கையில் ஜம்மு - காஷ்மீரிடம் இருந்து மட்டும் அந்த உரிமைகளை ஏன் பறிக்கவேண்டும்?ஜம்மு - காஷ்மீரில், கடந்தஇரண்டரை ஆண்டுகளில் 65சதவிகித தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள் ளன. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.எனவே, கடந்த ஜூன் மாதம்அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் அளித்த உத்தரவாதங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்கி, ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு குலாம் நபி ஆசாத் பேசியுள்ளார்.

;